It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2010/12/02

நாலு அனாவும் , 25 காசும்


இனி 25 பைசா எல்லாம் கிடையாதாம் . ஏற்கனவே மக்கள் 25 பைசா , 50 பைசா இவற்றை எல்லாம் மறந்து நாட்களாகி விட்டன . பிச்சைகாரர்கள் கூட ஒரு ரூபாய்க்கு குறைந்து வாங்குவதை கௌரவ குறைவாக என்னும் காலம் இது . விக்கிற விலைவாசியில ரூபாய் நோட்டுகளே மதிப்பு இல்லாமல் இருக்கிறது . 1000 ரூபாய் நோட்டை மாற்றினாலே எதுவும் தேற மாட்டேங்குதுன்னு நீங்க எல்லாரும் , (நானும் கூடத்தான் ) புலம்பறது காதுல விழுது . கையில வாங்கினேன் , பையில போடலே காசு போன எடம் தெரியலேன்னு என்னிக்கோ பாடின பாட்டு , இன்னிக்கும் , என்னிக்கும் சரியா தான் இருக்கும் போலிருக்கு . இதுல 25 காசு , 50 காசு எல்லாம் மியுசியம்ல வைக்கிற பொருளா போய் விட்டது . இனி 50 பைசா 25 பைசா சைஸ்லயும் , 1 ரூபா 50 பைசா சைஸ்லயும் , 2 ரூபாவை 1 ரூபா சைஸ்லயும் தயாரிக்க நம்ம இந்திய அரசாங்கம் முடிவு பண்ணி இருக்காம் .

No comments: