ஆன்மீகம் என்பது சிறந்த அறிவுத் திறன் இல்லை . அது உயர்ந்த இலட்சியங்களுடையவராக இருப்பதோ, நல்லொழுக்கமோ,தவநெறியோ இல்லை. சமயப் பற்றும் இல்லை . உணர்ச்சி வேகமும் இல்லை. இந்தச் சிறந்த குணங்கள் அனைத்தும் இணைந்த ஒன்றும் இல்லை.
ஆன்மீகத்தின் சாரம் நமது மனம், உயிர், உடல் அல்லாமல் நமது ஜீவனின் அக உண்மையாக உள்ள ஒரு மெய்ப் பொருளுக்கு, ஆன்மாவுக்கு விழித்தெழுதல் ஆகும் .
அதை அறிய வேண்டும், அதை உணர வேண்டும், அதுவே ஆகவேண்டும் என்ற உள் ஆர்வம் என்றும் இருக்கும். பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிப் பரவியும் அதற்கு அப்பாலும் இருந்து அதே சமயம் நமது சொந்த ஜீவனிலும் உறைகின்ற பேருண்மையுடன் தொடர்பு கொள்ளுதல், அதனுடன் உறவு ஏற்படுத்தல், அதனுடன் ஐக்கியமாதலே ஆன்மிகம் ஆகும் .
அந்த ஆர்வத்தின், அந்தத் தொடர்பின், அந்த ஐக்கியத்தின் பயனாக நமது ஜீவன் முழுவதற்கும் ஒரு புதிய திருப்பம், ஒரு மாற்றம், ஒர் உருமாற்றம் ஏற்படும். நாம் ஒரு புதிய ஜீவனாக, ஒரு புதிய ஆன்மாவாக வளர்வோம் .
நமது இதயபூர்வமான பிரார்த்தனை எதுவும் வீண்போவதில்லை.
No comments:
Post a Comment