மடி கணினி எனப்படும் lap top ஐ உபயோகிக்கும் நபர்கள் இன்று உலகமெங்கும் உள்ளார்கள் . குறிப்பாக இளைஞர்கள் அதிகம் உபயோகிக்கும் கணினியே மடி கணினிதான் .
அப்படிப்பட்ட இளைஞர்களுக்கான ஒரு எச்சரிக்கை மணியாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
New York ஐ சேர்ந்த Yelim Sheynkin என்ற ஒரு Urologist தனது ஆராய்ச்சியின் முடிவில் வெளியிட்டுள்ள தகவல் . இளைஞர்களுக்கு மடி கணினியை அதிக நேரம் தங்களது மடியில் வைத்து உபயோகிக்கும் போது உருவாகும் வெப்பம் அதிகமாக இருப்பதால் , அது பிற் காலத்தில் குழந்தை பிறப்பை பாதிப்பதாக அவர் முடிவை வெளியிட்டு உள்ளார் .
இந்த வெப்பத்தை நம்மால் உணர முடியாததால் , இது குறித்து அலட்சியமாக இருப்பதாகவும் , அதன் பாதிப்பு பின்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார் .
ஆகவே இது குறித்து இளைஞர்கள் மிகவும் விழிப்பு உணர்வுடன் இருக்கவும் .