2010/01/16
வானில் தெரிந்த அற்புதம்
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரிய கிரகணம் நேற்று இந்தியா முழுவதும் தெரிந்தது. வானில் நிகழ்ந்த இந்த அதிசியம் நேற்று கங்கண சூரிய கிரகணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேல் நடை பெற்ற நிகழ்வாகும் இது. அதிலும் சுமார் பத்து நிமிடத்துக்கு சூரியன் முழுவதும் மறைந்து , பகலிலேயே இரவு போல் காட்சி அளித்த நிகழ்வு நமது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அல்லவா. சூரியன் முழுவதும் மறைந்து ஒரு வட்ட வளையல் போல் காட்சியளித்த நிகழ்வை காண மீண்டும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் . பத்து நிமிடம் சூரியன் மறையும் கிரகணம் வானில் நிகழ்வது எப்போதோ ஒரு முறை நிகழும் . அந்த அறிய காட்சியை காண கொடுத்து வைத்த நாம் அனைவரும் பாக்கியசாலிகளே.
Labels:
அதிசிய நிகழ்வு,
கிரகணம்,
சூரியன்
ஹைதி மக்களுக்கு அஞ்சலி
கடந்த மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகளில் , ஹைதி தீவில் நிகழ்ந்த பூகம்பம் நமது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கியுள்ள நில நடுக்கம் இது . ஏற்கனவே ஏழ்மையான அந்த தீவு மக்களுக்கு இந்த நில நடுக்கம் மிகவும் ஆற்ற முடியாத சோக வடுக்களை விட்டு சென்றுள்ளது . உலகம் முழுவதும் உள்ள நல்ல மனித உள்ளங்களோடு ஹைதி தீவு மக்களுக்காக நாமும் பிரார்த்திப்போம். இயற்கையின் சீற்றங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில் நம்மால் இயன்ற வரையில் நமது பூமி தாயை காக்கும் வழிமுறைகளை கண்டுபிடிப்போம். சுனாமி மற்றும் மற்ற இயற்கை சீரழிவுகள் நமது மனித குலத்தை தாக்கா வண்ணம் இறைவனை வேண்டுவோம்.
Labels:
நில நடுக்கம்,
ஹைதி தீவு
Subscribe to:
Posts (Atom)