2010/01/16
வானில் தெரிந்த அற்புதம்
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரிய கிரகணம் நேற்று இந்தியா முழுவதும் தெரிந்தது. வானில் நிகழ்ந்த இந்த அதிசியம் நேற்று கங்கண சூரிய கிரகணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேல் நடை பெற்ற நிகழ்வாகும் இது. அதிலும் சுமார் பத்து நிமிடத்துக்கு சூரியன் முழுவதும் மறைந்து , பகலிலேயே இரவு போல் காட்சி அளித்த நிகழ்வு நமது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அல்லவா. சூரியன் முழுவதும் மறைந்து ஒரு வட்ட வளையல் போல் காட்சியளித்த நிகழ்வை காண மீண்டும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் . பத்து நிமிடம் சூரியன் மறையும் கிரகணம் வானில் நிகழ்வது எப்போதோ ஒரு முறை நிகழும் . அந்த அறிய காட்சியை காண கொடுத்து வைத்த நாம் அனைவரும் பாக்கியசாலிகளே.
Labels:
அதிசிய நிகழ்வு,
கிரகணம்,
சூரியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment