It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2010/01/09

புதிய கோளங்கள் புதிய உயிர்கள்

இந்த பரந்த அண்ட வெளியில் , பூமியில் வசிக்கும் நமது மனித இனம் மட்டும் தனியே இல்லையாம். நம்மை போன்றே உயிர் உள்ள கோளங்களை இந்த வருடமோ , அல்லது வரும் ஐந்து
வருடங்கள் உள்ளோ , வானவியலாளர்கள் கண்டு பிடித்து விடுவார்களாம் . பெரும்பாலும் இந்த வருடத்திற்குள்ளேயே இது குறித்த கண்டுபிடிப்பு வெளியிடப் படலாம் என்று ஆராய்சியாளர்கள்
தெரிவித்து உள்ளனர்.
நாம் இப்போதே அந்த வேற்று கிரக வாசிகளுக்கு ஒரு ஹாய் சொல்லி விடலாமா.







இயற்கைதரும் மழையும் , நமது சேமிப்பும்

வட கிழக்கு பருவ மழை சென்னையில் அதிகமாபெய்துள்ள போதும் , சென்னையை சுற்றியுள்ள அணைகள் எதுவும் இந்த முறை நிரம்பவில்லையாம். மாதம் மும்மாரி எல்லாம் இப்போது இல்லை. பெய்கின்ற மழையை நல்ல முறையில் சேமிக்க நல்ல வழி முறைகளை நாம் கடைபிடிக்க வேண்டாமா . அணைகளுக்கு நீர் வரும் வழிகளை நல்ல முறையில் பராமரித்தாலே ,
தண்ணீர் அணைகளுக்கு குறையாமல் சேருமல்லவா.
இனி வரும் காலங்களில் இருக்கும் அனைத்து வாய்கால்களை நல்ல முறையில் பராமரித்து , கிடைக்கும் மழை நீரை நல்ல முறையில் சேமிப்போம் .
ஆங்காங்கே சிறிய ஏரிகளை சிலர் உடைத்து விடும் சம்பவங்களும் நடக்கின்றது. இவற்றை வரும் காலங்களில் தவிர்த்து , இயற்கை நமக்கு வழங்கும் மழை நீரை நல்ல முறையில் சேமிக்க அனைவரும் முயற்சிக்கலாமே.