It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2010/01/05

மார்கழி பூக்கள்

இந்த வருஷம் பனி ரொம்ப அதிகமா இருக்கு இல்ல . ஆனா வருஷா வருஷம் இதையேதான் சொல்லிக்கிட்டு இருக்கோம் . மார்கழி மாசத்துக்கு என்றே உள்ள குளிர் ப்ரத்யேகமானது .இந்த குளிர் காற்றில் தான் கோயில்களில் ஒலிக்கும் பக்தி பாடல்களும் , அதி காலை வேளையில் கிடைக்கும் வெண் பொங்கல் பிராஸத மணமும் , சபாக்களில் ஒலிக்கும் சங்கீத ஸ்வரங்களும் என்றும் நிறைந்து இருக்கின்றது.
சில பூக்களும்தான் . டிசம்பர் பூ , பூசணி பூ , இது எல்லாமே இந்த மாசத்துக்கு மட்டும் தான் . இப்போ எல்லாம் டிசம்பர் பூ யாரும் அதிகமா தலையில வெச்சுகறது இல்ல . அதிகமா பூசணி பூவும் கோலத்துல தென் படறது இல்ல. எல்லாத்தையும் நாம அதிகமா இழந்துகிட்டு இருக்கோம் . நாகரிகம் புரட்டி போட்ட விஷயங்களில் இதுவும் அடக்கம் .

மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன் . சங்கீதமும் இந்த மாசத்துக்கு ஒரு மணி மகுடம்தான் . திருவையாறு உத்சவமும், அந்த பஞ்ச ரத்ன கீர்த்தனைகளும் . வருஷா வருஷம் கேட்டாலும் எல்லாமே சுகானுபவம்தான்.

திரும்பவும் வெயில் கொளுத்த போவுது . அதுக்கு முன்னாடி இப்போ இருக்கும் பனி காலத்தை முழுவதும் அனுபவிப்போம்.

எந்தரோ மகானு பாவுலு , அந்தரிக்கு வந்தனமு .