It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"
Showing posts with label நாலு அனா. Show all posts
Showing posts with label நாலு அனா. Show all posts

2010/12/03

நாலு அணாவும் , 25 பைசாவும் -- 2


நமது வாழ்கையில் முக்கிய அங்கமாக விளங்கும் , நமது வாழ்க்கையை இப்போது எல்லாம் தீர்மானிக்கும் பணத்தின் பகுதிகளான ரூபாயும் பைசாவும் அடைந்துள்ள மாற்றங்கள் அதிகம்.

நாம் சின்ன வயதாக இருக்கும் போது , பார்த்த , உபயோகித்த ஒரு பைசா ,
இ ரண்டு பைசா , ஐந்து பைசா , பத்து பைசா , இருபது பைசா போன்றவை இப்போது உபயோகம் இன்றியும் வழக்கத்தில் இல்லாமலும் இருக்கிறது .

இப்போது அவற்றை பார்ப்பதே அரிதாக இருக்கிறது . ஐந்து பைசாவுக்கு கை நிறைய மிட்டாய் வாங்கியது எல்லாம் இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இன்று ஒரு சிரிய lollipop கூட ஒரு ரூபாய்க்கு குறைந்து இல்லை.

நாளை நமது அடுத்தடுத்த தலைமுறைகளில் தற்போது இருக்கும் நாணயங்கள் மதிப்பு இழக்கலாம் . நமது அடுத்த தலைமுறைகள் இந்த காசுகளின் படத்தை கூகுல் போன்றவற்றில் மட்டுமே பார்த்து தெரிந்துகொள்ளும் நிலை வரலாம் .

2010/12/02

நாலு அனாவும் , 25 காசும்


இனி 25 பைசா எல்லாம் கிடையாதாம் . ஏற்கனவே மக்கள் 25 பைசா , 50 பைசா இவற்றை எல்லாம் மறந்து நாட்களாகி விட்டன . பிச்சைகாரர்கள் கூட ஒரு ரூபாய்க்கு குறைந்து வாங்குவதை கௌரவ குறைவாக என்னும் காலம் இது . விக்கிற விலைவாசியில ரூபாய் நோட்டுகளே மதிப்பு இல்லாமல் இருக்கிறது . 1000 ரூபாய் நோட்டை மாற்றினாலே எதுவும் தேற மாட்டேங்குதுன்னு நீங்க எல்லாரும் , (நானும் கூடத்தான் ) புலம்பறது காதுல விழுது . கையில வாங்கினேன் , பையில போடலே காசு போன எடம் தெரியலேன்னு என்னிக்கோ பாடின பாட்டு , இன்னிக்கும் , என்னிக்கும் சரியா தான் இருக்கும் போலிருக்கு . இதுல 25 காசு , 50 காசு எல்லாம் மியுசியம்ல வைக்கிற பொருளா போய் விட்டது . இனி 50 பைசா 25 பைசா சைஸ்லயும் , 1 ரூபா 50 பைசா சைஸ்லயும் , 2 ரூபாவை 1 ரூபா சைஸ்லயும் தயாரிக்க நம்ம இந்திய அரசாங்கம் முடிவு பண்ணி இருக்காம் .