It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"
Showing posts with label stars. Show all posts
Showing posts with label stars. Show all posts

2010/12/03

நட்சத்திரங்களும் , சூரியனும்


நாம் பார்க்கும் வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளது என்று எண்ணமுடியாது என்று தானே நினைத்து இருக்கின்றோம் . இப்போது இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் போல் உள்ளது . Nature என்ற ஒரு புத்தகத்தில் விண்ஞானிகள் வெளியுட்டுள்ள ஒரு தகவலின் படி 3 க்கு பின்னால் 23
பூஜ்ஜியங்களை போட்டால் வரும் அளவிற்கு வானில் நட்சத்திரங்கள் இருப்பதாக
கணக்கிட்டு உள்ளனர் . இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் 300 sextillion , அல்லது 3 trillion times 100 billion என்று சொல்லவேண்டுமாம் . இதை எல்லாம் நம்மால் சொல்லவே கஷ்டமாக இருக்கும்போது எங்கே சென்று எண்ணுவது என்று நினைக்கிறீர்களா ? நானும் அதைத்தான் நினைத்து கொண்டிருக்கிறேன் .

சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம் . ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஏஞ்சலஸ் தூரன் என்ற பெண்மணி சூரியன் தனது சொந்தமான பொருள் என்று சொல்லி அது சம்பந்தமான ஆவணங்களை அந்த நாட்டு அமைச்சகத்தில் கொடுத்துள்ளாராம். சூரியனை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பவர்கள் அவருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளாராம் .

அவருக்கு வரும் வருமானத்தில் ஐம்பது சதவீதம் அரசுக்கு தருவதாகவும் , பத்து சதவீதம் உலக ஏழை மக்களுக்கு பசி ஆற்றவும் தருவதாகவும் , பத்து சதவீதம் ஆராய்ச்சிக்கு செலவு செய்ய போவதாகவும் கூறி உள்ளாராம் .

இது எப்படி இருக்கு ?