யோகம் என்றால் இறைவனுடன் ஐக்கியமடைதல் என்பது பொருள். இந்த ஐக்கியம் சமர்ப்பணத்தின் மூலம் நிறைவேறும் . நீ உன்னை இறைவனுக்குக் கொடுப்பதன் அடிப்படையில் அது நிகழும்.
"நான் இறைவனின் தொண்டன், என்னுடைய வாழ்வை முற்றிலுமாக இறைவனுக்கே கொடுத்துவிட்டேன். இனி எனது முயற்சியெல்லாம் தெய்வ வாழ்வை அடையும் பொருட்டாகவே இருக்கும்." என்று உணர வேண்டும் . நீ இறைவனுக்குச் சொந்தமானவன் என்பதை நீ ஒவ்வொரு அடியிலும் உணர வேண்டும்.
நீ எதைச் சிந்தித்தாலும், எதைச் செய்தாலும் இறை உணர்வே உன் மூலம் செயல்படுகிறது என்பது உனது இடைவிடாத அனுபவமாக இருக்க வேண்டும்.
இடைவிடாது இறைவனுடைய சாந்நியத்தில் வாழ வேண்டும். இந்த சாந்நித்தியமே உன்னை இயக்குகிறது. நீ செய்வதையெல்லாம் செய்விக்கிறது என்னும் உணர்வுடன் வாழ வேண்டும் .
உனது மனச்செயல்கள் ஒவ்வொன்றையும் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிந்தனையையும், உணர்ச்சியையும் மட்டுமல்லாமல், சாதாரணப் புறச் செயல்களையும் அதற்கு அர்ப்பணிக்க வேண்டும் .
தியானத்தின்போதுஉனது உடலும் புறவாழ்வும் மாற்றம் அடையாமலேயே இருக்கும்.
No comments:
Post a Comment