It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2010/11/29

ஸ்ரீ அரவிந்தர் அருளுரை - ஆன்மிகம்



ஆன்மீகம் என்பது சிறந்த அறிவுத் திறன் இல்லை . அது உயர்ந்த இலட்சியங்களுடையவராக இருப்பதோ, நல்லொழுக்கமோ,தவநெறியோ இல்லை. சமயப் பற்றும் இல்லை . உணர்ச்சி வேகமும் இல்லை. இந்தச் சிறந்த குணங்கள் அனைத்தும் இணைந்த ஒன்றும்
இல்லை.

ஆன்மீகத்தின் சாரம் நமது மனம், உயிர், உடல் அல்லாமல் நமது ஜீவனின் அக உண்மையாக உள்ள ஒரு மெய்ப் பொருளுக்கு, ஆன்மாவுக்கு விழித்தெழுதல் ஆகும் .


அதை அறிய வேண்டும், அதை உணர வேண்டும், அதுவே ஆகவேண்டும் என்ற உள் ஆர்வம் என்றும் இருக்கும். பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிப் பரவியும் அதற்கு அப்பாலும் இருந்து அதே சமயம் நமது சொந்த ஜீவனிலும் உறைகின்ற பேருண்மையுடன் தொடர்பு கொள்ளுதல், அதனுடன் உறவு ஏற்படுத்தல், அதனுடன் ஐக்கியமாதலே ஆன்மிகம் ஆகும் .


அந்த ஆர்வத்தின், அந்தத் தொடர்பின், அந்த ஐக்கியத்தின் பயனாக நமது ஜீவன் முழுவதற்கும் ஒரு புதிய திருப்பம், ஒரு மாற்றம், ஒர் உருமாற்றம் ஏற்படும். நாம் ஒரு புதிய ஜீவனாக, ஒரு புதிய ஆன்மாவாக வளர்வோம் .


நமது இதயபூர்வமான பிரார்த்தனை எதுவும் வீண்போவதில்லை.

2010/11/28

DIVINE DISCOURSE - SRI SAI


The grace of God can be won through Love alone.

By a love that knows no bargaining;

By a love that is paid gladly to the All-Loving;

By a love that is unwavering.

Love alone can overcome obstacles.

There is no triumph more praiseworthy than surrender to God.

2010/11/24

ஸ்ரீ அன்னையின் அருளுரை - அன்பு


அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே.

பேச்சைவிட அது நலனை நம்மிடத்தும் பிறரிடத்தும் அளிக்க வல்லது.


நமது குறைகளெல்லாம் நீக்குவோம் . ஆணவமும், அஞ்ஞானமும் அழிப்போம் .

இந்த அன்பில்தான் அமைதியும் இன்பமும் உள்ளது . இணையற்ற ஆறுதல் அளிப்பதும் இதுவே. அனைத்தையும் வென்று தருவதும் இதுவே.


2010/11/22

ஸ்ரீ அன்னையின் அருளுரை - ஆண்டவனின் அருள் பெரும் முறை




நாம் எதையும் மறைத்து வைக்காமல் நம்மை இறைவனுக்குக் கொடுப்போம், அப்பொழுது மிகச் சிறந்த முறையில் இறைவனின் அருளைப் பெறலாம்.

அருள் வேறுபாடின்றி எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொருவனும் அவனவனுடைய நேர்மைக்குத் தக்கபடி பெற்றுக்கொள்கிறான்

இறைவனின் அருள் ஒன்றே சாந்தி, மகிழ்ச்சி, ஆற்றல், ஒளி, ஞானம், உயர்ந்த இன்பம், அன்பு ஆகியவற்றை அவற்றின் சாரத்திலும் உண்மையிலும் தரமுடியும்.

DIVINE DISCOURSE - SRI SAI


Be humble, do not become proud of your wealth or status or authority or learning or caste.

The mind, the senses, the intelligence, the imagination, the desires, the plans, the prejudices, the discontent, the distress, etc. are all items of luggage. Reduce the luggage you carry about when on the journey of life

Dedicate all your physical possessions and mental skills and intellectual attainments to the service of the Lord .

2010/11/19

DIVINE DISCOURSE - SRI SAI


The best way to love God is to love all and serve all. Man's foremost duty is to serve his fellowmen and make them happy.


Happiness and sorrow are like passing clouds. One should not be elated in times of pleasure or depressed in times of pain

Good and bad do not exist outside, they are mere reflections of what is within you

அன்னையின் அருளுரை - வாழும் முறை


முறையாக வாழக் கற்றுக்கொள்வது மிகக் கடினமான ஒரு கலை. மிகச் சிறு பிராயத்திலேயே அதைக் கற்கத் தொடங்கி, அதற்காக முயற்சி எடுத்துக்கொள்ளாவிடில் ஒருவன் ஒருநாளும் அதைச் சரியாகக் கற்றுக்கொள்ளமாட்டான். உடலை நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்துக்கொள்ளவும், மனத்தின் அமைதியும் உள்ளத்தில் நல்லெண்ணமும் இருக்கக் கற்றுக்கொள்ளாவிடில் ஏதோ வாழ்க்கை என்று சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை கூட ஒருவன் வாழமுடியாது .

2010/11/09

மடி கணினி - தேவை கவனம்

மடி கணினி எனப்படும் lap top ஐ உபயோகிக்கும் நபர்கள் இன்று உலகமெங்கும் உள்ளார்கள் . குறிப்பாக இளைஞர்கள் அதிகம் உபயோகிக்கும் கணினியே மடி கணினிதான் .

அப்படிப்பட்ட இளைஞர்களுக்கான ஒரு எச்சரிக்கை மணியாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

New York ஐ சேர்ந்த Yelim Sheynkin என்ற ஒரு Urologist தனது ஆராய்ச்சியின் முடிவில் வெளியிட்டுள்ள தகவல் . இளைஞர்களுக்கு மடி கணினியை அதிக நேரம் தங்களது மடியில் வைத்து உபயோகிக்கும் போது உருவாகும் வெப்பம் அதிகமாக இருப்பதால் , அது பிற் காலத்தில் குழந்தை பிறப்பை பாதிப்பதாக அவர் முடிவை வெளியிட்டு உள்ளார் .

இந்த வெப்பத்தை நம்மால் உணர முடியாததால் , இது குறித்து அலட்சியமாக இருப்பதாகவும் , அதன் பாதிப்பு பின்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார் .

ஆகவே இது குறித்து இளைஞர்கள் மிகவும் விழிப்பு உணர்வுடன் இருக்கவும் .

2010/11/08

ஸ்ரீ அன்னையின் அருள் மொழி - ஆன்மீக முன்னேற்றம்



நாம் ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் .

உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் நீ அடைபட்டிருப்பதால் , நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.

உன்னை மிகக்குறுகிய இடத்திற்குள் பிடித்து அடைத்து வைத்திருக்கிற எதிர்ப்புகள், பழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் எவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அவை இருப்பதைத் தெரிந்து கொண்டபின் நீ ஒருமுனைப்பட்டு, இறைவனது சக்தியையும் அருளையும் அழைத்து,
அகங்காரத்தை நீக்கவேண்டும்.

சொந்த இலாப நஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எந்தப் பற்றுதல்களும் இல்லாமல், எந்த விருப்பு வெறுப்புகளும் இல்லாமல், வெற்றி, அதிகாரம், சுயதிருப்தி, இவற்றையெல்லாம் விரும்பாமல் தெய்வ வேலை ஒன்றையே செய்வேன், வேறு எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று தீர்மானம் செய்துகொள்ளவும் வேண்டும்.
இந்த முறையில், அகங்காரம் உன்னைவிட்டு அகலும்.

2010/11/03

DIVINE DISCOURSE - SRI SAI


At the time of birth, human heart is pure, selfless and steady. But with the passage of time, man loses his purity on account of his association with various individuals.

Your feelings will become noble and pure only when you associate yourself with Divinity.

Remember the truth that you are born to serve the society. Make no distinctions whatsoever in rendering service. Serve your parents, brothers, friends, relatives and even beggars alike.

Divine Grace will flow in abundance only when you serve with the spirit of humility and equality. Service is the easiest path to attain Divine Grace

DIWALI WISHES


May the light of love and devotion shine brightly in our hearts

May the light of understanding shine in our minds,

May the light of harmony glow in our home

May our presence light the lamps of love wherever we go.

May our smile, our words and our actions be as sweet

as the sweets of this festive season.
Let us pray to God to bring us the true wealth of peace, health, happiness, and love in our life


WISH YOU ALL "HAPPY DIWALI "