சமீப காலமாய் காலேஜ் மற்றும் பள்ளிக்கூடம் போகும் மாணவிகளிடமும் , மற்றுமுள்ள இளம் பெண்களிடமும் நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.
நமது கலாச்சாரம் , மற்றும் பழக்க வழக்கங்கள் சிறிது சிறிதாக மறக்கப் பட்டுக் கொண்டே இருப்பதாக நினைக்க தோன்றுகிறது.
சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான இளைஞிகள் நெற்றியில் பொட்டே இல்லாமல் பங்கேற்றனர். இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் பல பிரபல இளம் பாடகிகள் பங்கேற்ற நிகழ்ச்சி அது.
இன்று நான் யோகா மந்திரம் சென்ற போது அங்கே நான் பார்த்த பல வெளி நாட்டு பெண்கள் தலையில் அழகாய் பூ வைத்தும் , நெற்றியில் பொட்டு வைத்தும் இருந்தனர். நாம்தான் நாகரீகம் என்ற பெயரில் ஒவ்வொரு நமது நல்ல விஷயங்களையும்
இழந்து கொண்டே வருகிறோம். இந்த விஷயத்தில் பெற்றோர்களும் சற்று அக்கறை கொண்டு நமது நல்ல கலாச்சாரத்தை இந்த இளைய தலைமுறைக்கும் எடுத்து சொல்லி அவற்றை பின் பற்ற செய்தால் மிகவும் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment