It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"
Showing posts with label அருளுரை. Show all posts
Showing posts with label அருளுரை. Show all posts

2010/12/16

ஸ்ரீ அன்னையின் அருளுரை - யோகம்



யோகம் என்றால் இறைவனுடன் ஐக்கியமடைதல் என்பது பொருள். இந்த ஐக்கியம் சமர்ப்பணத்தின் மூலம் நிறைவேறும் . நீ உன்னை இறைவனுக்குக் கொடுப்பதன் அடிப்படையில் அது நிகழும்.

"நான் இறைவனின் தொண்டன், என்னுடைய வாழ்வை முற்றிலுமாக இறைவனுக்கே கொடுத்துவிட்டேன். இனி எனது முயற்சியெல்லாம் தெய்வ வாழ்வை அடையும் பொருட்டாகவே இருக்கும்." என்று உணர வேண்டும் . நீ இறைவனுக்குச் சொந்தமானவன் என்பதை நீ ஒவ்வொரு அடியிலும் உணர வேண்டும்.

நீ எதைச் சிந்தித்தாலும், எதைச் செய்தாலும் இறை உணர்வே உன் மூலம் செயல்படுகிறது என்பது உனது இடைவிடாத அனுபவமாக இருக்க வேண்டும்.

இடைவிடாது இறைவனுடைய சாந்நியத்தில் வாழ வேண்டும். இந்த சாந்நித்தியமே உன்னை இயக்குகிறது. நீ செய்வதையெல்லாம் செய்விக்கிறது என்னும் உணர்வுடன் வாழ வேண்டும் .

உனது மனச்செயல்கள் ஒவ்வொன்றையும் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிந்தனையையும், உணர்ச்சியையும் மட்டுமல்லாமல், சாதாரணப் புறச் செயல்களையும் அதற்கு அர்ப்பணிக்க வேண்டும் .

தியானத்தின்போதுஉனது உடலும் புறவாழ்வும் மாற்றம் அடையாமலேயே இருக்கும்.

2010/12/06

ஸ்ரீ விவேகானந்தர் அருளுரை - இறைவன் யார் ?



இறைவன் என்பது யார்? யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள். அவர் என்றும் உள்ளவர்,


அவர் எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன் .

பிரம்மத்தைப் பற்றி மனித மனத்தினால் உணர முடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன்.

2010/11/29

ஸ்ரீ அரவிந்தர் அருளுரை - ஆன்மிகம்



ஆன்மீகம் என்பது சிறந்த அறிவுத் திறன் இல்லை . அது உயர்ந்த இலட்சியங்களுடையவராக இருப்பதோ, நல்லொழுக்கமோ,தவநெறியோ இல்லை. சமயப் பற்றும் இல்லை . உணர்ச்சி வேகமும் இல்லை. இந்தச் சிறந்த குணங்கள் அனைத்தும் இணைந்த ஒன்றும்
இல்லை.

ஆன்மீகத்தின் சாரம் நமது மனம், உயிர், உடல் அல்லாமல் நமது ஜீவனின் அக உண்மையாக உள்ள ஒரு மெய்ப் பொருளுக்கு, ஆன்மாவுக்கு விழித்தெழுதல் ஆகும் .


அதை அறிய வேண்டும், அதை உணர வேண்டும், அதுவே ஆகவேண்டும் என்ற உள் ஆர்வம் என்றும் இருக்கும். பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிப் பரவியும் அதற்கு அப்பாலும் இருந்து அதே சமயம் நமது சொந்த ஜீவனிலும் உறைகின்ற பேருண்மையுடன் தொடர்பு கொள்ளுதல், அதனுடன் உறவு ஏற்படுத்தல், அதனுடன் ஐக்கியமாதலே ஆன்மிகம் ஆகும் .


அந்த ஆர்வத்தின், அந்தத் தொடர்பின், அந்த ஐக்கியத்தின் பயனாக நமது ஜீவன் முழுவதற்கும் ஒரு புதிய திருப்பம், ஒரு மாற்றம், ஒர் உருமாற்றம் ஏற்படும். நாம் ஒரு புதிய ஜீவனாக, ஒரு புதிய ஆன்மாவாக வளர்வோம் .


நமது இதயபூர்வமான பிரார்த்தனை எதுவும் வீண்போவதில்லை.

2010/11/24

ஸ்ரீ அன்னையின் அருளுரை - அன்பு


அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே.

பேச்சைவிட அது நலனை நம்மிடத்தும் பிறரிடத்தும் அளிக்க வல்லது.


நமது குறைகளெல்லாம் நீக்குவோம் . ஆணவமும், அஞ்ஞானமும் அழிப்போம் .

இந்த அன்பில்தான் அமைதியும் இன்பமும் உள்ளது . இணையற்ற ஆறுதல் அளிப்பதும் இதுவே. அனைத்தையும் வென்று தருவதும் இதுவே.


2010/11/22

ஸ்ரீ அன்னையின் அருளுரை - ஆண்டவனின் அருள் பெரும் முறை




நாம் எதையும் மறைத்து வைக்காமல் நம்மை இறைவனுக்குக் கொடுப்போம், அப்பொழுது மிகச் சிறந்த முறையில் இறைவனின் அருளைப் பெறலாம்.

அருள் வேறுபாடின்றி எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொருவனும் அவனவனுடைய நேர்மைக்குத் தக்கபடி பெற்றுக்கொள்கிறான்

இறைவனின் அருள் ஒன்றே சாந்தி, மகிழ்ச்சி, ஆற்றல், ஒளி, ஞானம், உயர்ந்த இன்பம், அன்பு ஆகியவற்றை அவற்றின் சாரத்திலும் உண்மையிலும் தரமுடியும்.